பகிர்தலின் மூலம் விரிவும் ஆழமும் பெறுவது ஞானம்.
கடவுளுக்கு தண்டனை
க. உபேந்திரன்
குருமண்வெளி
நானும்
கடவுளும்
குற்றவாளிக் கூண்டில்.
வழக்கு தொடர்ந்தது.
எனக்கு நானே வாதிட்டேன்

என் குற்றங்களை
ஒப்புக் கொண்டேன்
அதற்காக
மன்னிப்பு கேட்டேன் கூசாமல்.

அ...... சத்தியமாக
திருந்தி நடப்பேன் - என்றேன்.
அதனால்
என்னை மன்னித்து
எனக்கு
விடுதலை.

பாவம் கடவுள்
கடவுள் மீது குற்றங்கள்
அடுக்கடுக்காய்
உன் படைப்பில்
ஒருவனை ஒருவன் வெட்டுகிறான்
ஒருவனை ஒருவன் சுரண்டுகின்றான்.
இதுவா - உன் படைப்பு
மனிதனிடம்
“மனிதம்” எங்கே?
குற்றப்பட்டியல் நீள்கின்றது.

கடவுள் - தன்
குற்றத்தை ஒப்புக்கொள்ளவும் இல்லை
இனிமேல்
மனிதனை - மனிதனாக
படைப்பேன் - என
உறுதி கூறவும் இல்லை
இதனால்
கடவுளுக்கு
ஆயுள் தண்டனை

 
   
         
ஞானம் சஞ்சிகையில் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகட்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்புடையவர்கள். புனைபெயரில் எழுதுபவர்கள் தமது சொந்தப் பெயர், முகவரி ஆகியவற்றை வேறாக இணைத்தல் வேண்டும். பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப்படும் படைப்புகளைச் செவ்வைப்படுத்த ஆசிரியருக்கு உரிமையுண்டு. - ஆசிரியர்
Design & Developed By: Dream Solutions (Pvt) Ltd.