|
|
| |
ஒற்றைச் சிறகு |
எமதூரின் சூரிய ஒளிர்வாய்
அந்தப்பறவை
நிதமும் புலர்ந்திட்ட
புலரிகளிலன்றி
அந்திப் பொழுதுகளிலும்
எனதருகாமை வரத்
தவறுதலாய்த் தெரிவதில்லை!
அதற்கென்ன சுதந்திரம்?
சின்ன வியூகமதில்,
பெருமூச்சை உதிர்த்திடுவேன்!
எனினும் பின்பாய் அது
ஏதோவோர் கனதியதில் திளைத்துழன்று
எனதிடமே சரணடைய
வருகிறதோ எனத் திகைத்துத்
திணறிடுவேன் நான்!
அர்த்தங்கள் எதுவெதுவோ
யானறியேன் இதுவரையில்!
பேர் தெரியாப் பட்சியதை,
வெறுத்துப் பரிகசித்தொதுக்காது,
வரும் பொழுதுதனில்
பண்புடன் பேணிட்டேன்!
இத்தனை நாள் வந்த அது
அன்று மட்டும் தாமதித்தெனை
உசுப்பிற்று!
பேரறியாப் பட்சி யது
காலப் பெயர்ச்சியதில்
புலம்பெயர்ந்து போயிற்றோ |
-ச. நிரஞ்சனி, சங்கத்தானை |
|
அன்றியது
பறவைகளையுண்ணும்
ஊரதுவில் சிறைப்பட்டு
எவரதாவது வாயதிலும்
அகப்பட்டுளதோ?
விசித்திர வழக்குகளில்,
திசையறியாதது தடுக்கிற்றோ?
திடுமெனுமொலியதனால்
திடுக்கிட்டு நிமிர்ந்திட்டேன்
ஒற்றைச் சிறகுக் காயமதால்
துடித்துத் துவழ்ந்து
பாதத்தினடியில் வீழ்ந்தது அது!
ஈரம்கசிந்திட்ட விழியூடு
நோக்கிட்டேனதை,
இனியது ஒற்றைச்சிறகுடனே
சிறகடிக்க இயன்றிடுமா?
தகிப்பு எனதுளே
கனதியாய்க் கனன்றது!
இறைவா அப்பட்சியது,
என்ன குற்றம் செய்தது? |
|