கே. எஸ். சிவகுமாரன் இலங்கையின் முன்னணி திறனாய்வாளர்களுள் ஒருவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் இருபது புத்தகங் களை எழுதியிருக்கிறார். இவற்றுள் பெரும் பாலானவை இலக்கியத் திறனாய்வு பற்றியதும் இலக்கிய மதீப்பிடுகள் பற்றியவையுமாகும்.
“நம்மில் பலர் திறனாய்வுப் போக்குடைய சகல எழுத்துக்களையும் திறனாய்வென்றோ விமர்சனமென்றோ கவனக் குறைவாகக் கணித்து விடுகின்றனர் இது தப்பு. நெல்லுக்கும் பதருக்கும் இடையே உள்ள வித்தியாசம் தெரியாத சூழலில் “திறனாய்வு” என்ற புனித அர்த்தம் பொதிந்த வார்த்தையை கொச்சைப் படுத்தாமல் “பத்தி” எழுத்து என்று கூறிக் கொள்வதில் நான் சங்கடப்படவில்லை அங்கு நேர்மையுண்டு என நினைக்கிறேன்” என்று கூறும் கே. எஸ். சிவகுமாரன் அவ்வப்போது பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் எழுதிய எழுத்துக்களின் தொகுப்பு இது. திறனாய்வுக் குறிப்புகள் ஊடகத்துறை பற்றிய குறிப்புகள், திரைப்பட இரசனைக்குறிப்புகள், அமெரிக்க நினைவுகள், சஞ்சிகை அறிமுகங்கள், தனது அனுபவக் குறிப்புகள் கவிதை நூல்கள், சிறுகதைநூல்கள், விமர்சன நூல்கள், இலக்கிய நூல்கள், அறிஞர்கள், எழுத்தாளர்கள் பற்றி யெல்லாம் இந்நூலில் பதிவு செய்துள்ளார் சிவகுமாரன். இவற்றை வாசிக்கும் போது ஆசிரியரின் பரந்த அறிவையும், தேடலையும் பலதையும் வாசிக்கும் பண்பையும் காணக்கூடிய தாக இருக்கிறது 288 பக்கங்களில் 58 தலைப்புக் களில் காணப்படும் விடயங்கள் இலக்கிய மாணவர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் பயனுடையவை. ஈழத்துக் கலை இலக்கியம் தொடர்பான ஓர் அடிப்படையை அறிந்து கொள்வதற்கு வேண்டிய பல விடயங்கள் இந்நூலில் அடங்கியுள்ளன. ஆசிரியரின் சரளமான நடை நூலினைச் சலிப்பின்றி வாசிப்பதற்கு உதவுகிறது.
இந்நூலில், நிருபமா மேனன் ராவின் ‘ரெயின் ரைசிங்ஷி கவிதை நூல், வீடு :- ஆய்வறி வாளரிடமும் ஒரு குறியீடு! ஆகிய தலைப்புகளில் அமைந்த இரண்டு பத்தியெழுத்துக்கள் மட்டுமே இந்திய இலக்கியம் தொடர்பானவை. நூலை வாசித்து முடித்தும், ஆசிரியர் ஏன் இந்த நூலுக்கு இந்தத் ‘தலைப்பு’ இட்டார் என்ற எண்ணம் மனதில் எழுவது தவிர்க்க முடியாத தாகிறது?
-சூர்யா;