பகிர்தலின் மூலம் விரிவும் ஆழமும் பெறுவது ஞானம்.
ஒளி - 07
சுடர் - 01
இதழ் - 73
June 2006
நூல்
ஆசிரியர்
பதிப்பு
விலை
பகிர்வு (கவிதைகள்)
சுபாஷினி
2006 பெப்ரவரி
ரூ175/=

சுபாஷினியின் கன்னிப்படைப்பாக வெளி வந்துள்ளது ‘பகிர்வு’ என்னும் கவிதைத் தொகுதி. யாழ் பல்கலைக்கழக நுண்கலைத் துறை மாணவியான சுபாஷினியின் இக்கவிதைத் தொகுதிக்கு வாழ்த்துரை வழங்கிய யாழ் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா, “உள்ளத்து உணர்வுகளையும், அவற்றின் வெளிப்பாடுகளையும், சமூகத்தை நோக்கிய சிந்தனை ஓட்டத்துடன் சுபாஷினி கவிதையாக்கியிருக்கிறார். புதுக்கவிதையினூடு ஒரு விதமான ஓசை ஒழுங்கையும் இவர் கையாண்டுள்ளமை சிறப்பு வாய்ந்தது. இசைத்துறையிலே திறமையும் ஈடுபாடும் கொண்ட சுபாஷினியின் கவிதைகளிலே ஓசைநயம் ஒழுங்காக அமைவதில் ஆச்சரியம் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
சுபாஷினியின் கவிதைகளில் தன்னுணர்ச் சிக் கவிதைகளே அதிகம். சமூகப் பிரச்சனை களைளும் சில கவிதைகளில் பாடுபொருளாகி யுள்ளன. சீதனம், சாதி, மூடநம்பிக்கைகள், பகட்டு வாழ்க்கை, முரண்பாடுகள், மூடநம்பிக் கைகள் ஆகியவற்றைக் கண்டு கொதிப்படைந்து கவிதைகளாக வெளிக்காட்டியுளார் சுபாஷினி. ஆற்றொழுக்கான கவிவரிகள், படிமங்கள் அதிக மின்றி நேரிடையாகவே சொல்லிவிடும்பாங்கு வாசிப்பவர்களது உணர்வுகளை இலகுவாகத் தொட்டுவிடுகின்றன. உதாரணத்துக்கு ஒரு கவிதை :-
. . . . . . . . . . . . தந்தி அறுந்து கிடந்த
. . . . . . . . . . . . ‘யாழு’க்கு கம்பி
. . . . . . . . . . . . போட்டுவைத்தது சமாதானம்
. . . . . . . . . . . . சுருதியும் லயமும் சுக்கு நூறாய்
. . . . . . . . . . . . கிடந்ததென்று நரம்புகளை
. . . . . . . . . . . . இறுக்கியது இனக்குழுக்கள்
. . . . . . . . . . . . இன்று...
. . . . . . . . . . . . யாழ் மீட்டப்பட்டுக்கொண்டிருக்க
. . . . . . . . . . . . நம் பாணர்களால்
. . . . . . . . . . . . சுருதிகள் பிசகிக் கொண்டிருப்பதாக
. . . . . . . . . . . . தகவல்கள்-
. . . . . . . . . . . . எவ்வாறாயினும் அந்த யாழின்
. . . . . . . . . . . . இன்னிசை என்றும் நிலைபெற
. . . . . . . . . . . . செய்ய வேண்டியது
. . . . . . . . . . . . நம் கடமை.
ஓவியர் ரமணியின் கருத்துமிக்க அட்டைப்பட ஓவியம் கலாநிதி செ. திருநாவுக்கரசு அவர்களின் அணிந்துரை ‘முருகு’வின் அறிமுகக் குறிப்பு ஆகியவற்றுடன் சிறந்த முறையில் வெளி வந்துள்ளது. ‘பகிர்வு’, சுபாஷினிக்குக் கவிதைத் துறையில் நல்ல எதிர்காலமுண்டு. தொடர்ந்து முயலவேண்டும்.
-சூர்யா;

.
         
ஞானம் சஞ்சிகையில் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகட்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்புடையவர்கள். புனைபெயரில் எழுதுபவர்கள் தமது சொந்தப் பெயர், முகவரி ஆகியவற்றை வேறாக இணைத்தல் வேண்டும். பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப்படும் படைப்புகளைச் செவ்வைப்படுத்த ஆசிரியருக்கு உரிமையுண்டு. - ஆசிரியர்
Design & Developed By: Dream Solutions (Pvt) Ltd.