ஆசிரியர்கள் சமூகத்தில் மதிக்கப்பட வேண்டியவர்கள். கண்ணியப்படுத்தப்பட வேண்டியவர்கள் என்ற எண்ணக்கருவை அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்கு சமூகத்தில் இருக்கும் அந்தஸ்த்து, இழைக்கப் படும் அநீதிகள் என்பன விரிவாக இந்நூலில் கவியாக்கம் பெற்றுள்ளன.
இந்நூலின் ஆசிரியர் பயிற்றப்பட்ட விஷேட கணித ஆசிரியராக களு/ஸாஹிறாக் கல்லூரியில் பணியாற்றுபவர். முஸ்லிம் எழுத்தாளர் சம்மேளனத்தின் உறுப்பினர். நாடகக் கலையிலும் தேர்ச்சி பெற்றவர்.
இந்நூலினைப் “படித்ததால் பட்ட உரை” எழுதிய கவிஞர் ஏ. இக்பால் பின்வருமாறு குறிப்பிடுகிறார். சமுதாய மதிப்பீட்டில் உயர்ந்து நிற்கும் ஆசிரியர்களின் மதிப்பைக் குறைப்பவர் கள் யார்? கல்வி சோரம் போவதற்குக் காரணமானவர்களும் அறிவிலிகளின் முடிவு மூலம் பூசுவதற்குதவுவதும்” ஆசிரியர்களும் தான் கற்பிக்காமல் சம்பளம் பெறுபவர்கள் கல்விக் கூடங்களற்ற இடங்களில் சம்பளம் பெறுவதற்காக ‘டியுஷன்’ கொடுப்பவர்கள். இந்த அவலத்தால் ஆசிரியர்களும் ‘ர’கரம் மாற்றப் படுகிறார்கள். ஆசிரியம் இந்த வழியில் குறைபாடடைகிறது. இக்கவிதை நூலிலெழும் ஆவேசம், கோபம் ஆசிரியரை சமுதாயம் மதிப்பதில்லை என்பதால் ஏற்படுவதை உணரலாம்.”
நூலாசிரியரின் உள்ளக் கொதிப்பு முழுவதும் 34 பக்க நீண்டகவிதை நூலாகி யுள்ளது. எளிமையும் சரளமும் நிறைந்த மொழி நடையில் கவிதையை ஆக்கியுள்ளார் நூலாசிரியர். எடுத்துக்காட்டாக,
- - - - - - - - - - எட்டப்பர்கள்
- - - - - - - - - - நாற#3021;காலிக் குதிரைகளை
- - - - - - - - - - எட்#2975;ிப் பிடிப்பதில்
- - - - - - - - - - முந#3021;தியடிக்கிறார்கள்
- - - - - - - - - - துய#3007;லுரித்து
- - - - - - - - - - ஆசி#2992;ியர்களின் கௌரவத்தை
- - - - - - - - - - திர#3020;பதியாக்கிய
- - - - - - - - - - துச#3021;சாதனனின் விலாசம்
- - - - - - - - - - இன்#2985;ும்
- - - - - - - - - - விச#3006;ரிக்கப்படவில்லை
- - - - - - - - - - அவன#3021;
- - - - - - - - - - அச்#2970;மின்றி
- - - - - - - - - - கட்#2970;ிகளின் உச்சிகளில்
- - - - - - - - - - உட்#2965;ார்ந்து கொண்டதனால்...
மாற்றி எழுதப்படவேண்டிய கதாபாத்திரமாக ஆசிரிய சமூகம் இருப்பதனை வலுவுடன் பலகோணங்களிலும் சுட்டிக்காட்டி இந்நிலைக்குக் காரணம் என்னவென்று சமூகம் சிந்திப்பதற்கு இந்நூல் ஒரு ஊக்கியாக அமையும் தகுதி யுடையது.
-சூர்யா;