பகிர்தலின் மூலம் விரிவும் ஆழமும் பெறுவது ஞானம்.
ஒளி - 07
சுடர் - 01
இதழ் - 73
June 2006
-சத்தியன்
ஹொட்டேல் ருவாண்டா திரைப்படம் :
ருவாண்டாவில் 1994 ஆம் ஆண்டு 10 இலட்சம் மக்கள் 100 நாட்களுக்குள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை, அதன் கருப்பொருளை, அதன் பின்னணியை அடிப்படையாகக் கொண்டு ‘ஹொட்டேல் ருவாண்டா’ என்னும் திரைப்படம் தயாரிக்கப்பட்டது. 2004ஆம் ஆண்டு ரொரண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த மக்கள் தேர்வுப் படமாக தெரிவு செய்யப் பட்டமை முக்கிய அம்சமாகும். ரெறி ஜோர்ஜ் என்பவரின் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் திரையிடப்பட்டது.

பரதநாட்டிய அரங்கேற்றம் :
வெள்ளவத்தை சைவ மங்கையர் கழக மாணவியும் திரு. திருமதி கணேசரத்தினத்தின் (குறிஞ்சி) தம்பதியினரின் புதல்வியுமாகிய செல்வி கௌஷிகா கணேசரத்தினத்தின் பரத நாட்டிய அரங்கேற்றம் 06.05.2006 அன்று வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்ட பத்தில் நடைபெற்றது. டிப்ளோமா பட்டதாரி மாணவியாகிய செல்வி கௌஷிகா, ஸ்ரீமதி சிவானந்தி ஹரிதர்சனிடம் முறையாகப் பரத நாட்டியம் பயின்று தன் பரதநாட்டிய அரங் கேற்றத்தை நடாத்தியுள்ளார். அறங்காவலர் பொன் வல்லிபுரம் தம்பதியினர் பிரதம விருந்தினர் களாகவும், இந்துசமய அலுவல்கள் திணைக் களப் பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தனர்.

மிருதங்க அரங்கேற்றம் :
சிவஞான ரஞ்சன் தம்பதிகளின் புதல் வனும், பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி மாணவரு மான அமலனின் மிருதங்க அரங்கேற்றம் அண்மையில் வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெற்றது. பிரபல மிருதங்க வித்துவான் கலாபூஷணம் ஏ. விக்கிர மனின் மாணவரான அமலனின் மிருதங்க அரங்கேற்றம் சங்கீதவித்துவான் ஏ. கே. கருணாகரனின் சங்கீத இசையுடன் நடை பெற்றது. அவரின் கர்நாடக சங்கீதம் இசை தெரியாதவர்களையும் தாளம் போட வைத்தது. பக்கவாத்தியங்களாக செல்வி சியாமனாங்கி கருணாகரன் வயலின் கலாபூஷணம் ரி. ஜெய சுந்தரம் கஞ்சிரா, ஏ. ரகுநாதன் கடம், மெற்றாஸ் கஜன் மொகர்சிங், செல்வி தேனுகா கருணா கரன் தம்புராவும் இசைத்தனர். பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி அதிபர். திரு. த. முத்துக்குமார சாமி உரையாற்றினார்.

ஆடற்பதம் :
நிர்மலாஞ்சலி பரதநாட்டியப் பாடசாலையின் 20 வருடப் பூர்த்தியை முன்னிட்டு வருடாந்த நடன நிகழ்வான ‘ஆடற்பதம்’ அண்மையில் வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்ட பத்தில் மிக விமரிசையாக அரங்கேறியது. பிரதம அதிதிகளாக வணக்கத்திற்குரிய பிதா என். எம் சவிரி அவர்களும், கலாசூரி அருந்ததி ஸ்ரீரங்க நாதனும், கௌரவ விருந்தினராக மூதூர் மேலதிக மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராசாவும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். நிர்மலாஞ்சலி பரதநாட்டியப் பாடசாலை மாணவிகள் பலரின் நடன நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. இளம் சிட்டுகளின் அபிநயத்துட னான நடன நிகழ்ச்சி சபையோருக்கு விருந்தாக அமைந்தது.

.
         
ஞானம் சஞ்சிகையில் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகட்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்புடையவர்கள். புனைபெயரில் எழுதுபவர்கள் தமது சொந்தப் பெயர், முகவரி ஆகியவற்றை வேறாக இணைத்தல் வேண்டும். பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப்படும் படைப்புகளைச் செவ்வைப்படுத்த ஆசிரியருக்கு உரிமையுண்டு. - ஆசிரியர்
Design & Developed By: Dream Solutions (Pvt) Ltd.