பகிர்தலின் மூலம் விரிவும் ஆழமும் பெறுவது ஞானம்.
ஒளி - 07
சுடர் - 01
இதழ் - 73
June 2006
பூக்கும்
சுமைகள்

சாரங்கா தயாநந்தன், Cambridge
கையை எடுங்கோப்பா...”
சொன்னபடியே தன் வயிற்றில் படிந்த அவனது கைகளை மெல்ல விலக்கினாள் அவள். குரலில் சலிப்பு ஊறியிருந்தது. அவசரமாகக் கையை எடுத்துக் கொண்டவன் மனம் வேதனையோடு மரவட்டையாய்ச் சுருங்கியது. மனைவியின் புறக்கணிப்பைப் போல வலி தரக் கூடியது உலகில் வேறொன்றுமில்லை என்று தோன்றியது அவனுக்கு.
.
மேம்பாடு
சி. சுதந்திரராஜா
சியாட்டின் உலகமே இருண்டு கொண்டது போலாயிற்று. சல்பர் மஸித்தேன் புட்டியைக் கொண்டு வந்து பருக்கியவன் தலையில் பேரிடி வீழ்ந்தவன் போலானான்.
வெள்ளை வேளேரென்ற மென்மையார்ந்த இமை மடலைத் திறக்கவே முடியாதபடி கோழிகள் பொத்துப் பொத்தெனச் சுருண்டு வீழ்ந்தன. கால்கள் சூம்பி எழுந்து நின்றிடத் தெம்பில்லாமல் அவலப் பட்டன.
.
பெரிய சல்லி
சிவனு மனோஹரன், ஹட்டன்
நேரம் ஏழு மணியைத் தாண்டி இருக்க வேண்டும். மென்மையான இருள் படர்ந்து தோட்டம் நிசப்தத்தில் கிடந்தது. அப்போது ஓட்டு லயத்தை வந்தடைந்த தலைவர் கிருஸ்ணசாமி நேரே பங்கஜத்தின் வீட்டினுள்தான் நுழைந்தார். அங்கே புகை மண்டிக் கிடக்கும் அடுப்படிக்குள் அல்லாடிக்கொண்டிருந்த பங்கஜம் தலைவரைக் கண்டதும் “என்னங்க சாமி இந்த நேரத்துல இங்கே வந்து நிக்கிறீங்க ஏதாவது நல்ல சேதி சொல்ல வந்தீங்களா...” என்றதும்
.
         
ஞானம் சஞ்சிகையில் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகட்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்புடையவர்கள். புனைபெயரில் எழுதுபவர்கள் தமது சொந்தப் பெயர், முகவரி ஆகியவற்றை வேறாக இணைத்தல் வேண்டும். பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப்படும் படைப்புகளைச் செவ்வைப்படுத்த ஆசிரியருக்கு உரிமையுண்டு. - ஆசிரியர்
Design & Developed By: Dream Solutions (Pvt) Ltd.